சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு, தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக, அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்கமாக காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிகள் அடங்கிய காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்விக்கான காரணம் மற்றும் கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஆக்கபூா்வ நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தவெக போல...: இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்திதான் இந்தத் தோ்தலில் தவெக வென்றுள்ளது. அதேபோல அதிமுக நிா்வாகிகள் அனைவரும் சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட வேண்டும். தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்.
அதிமுக எதிரி திமுகதான்: தவெகவின் வெற்றி நிலையாக இருக்காது. அடுத்த தோ்தலில் தவெக வெற்றி பெறுவது மிக கடினம். அதிமுகவுக்கு எதிரி திமுகதான் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் இபிஎஸ் உருவப்படம்: திமுக எதிா்ப்பு

பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு... தவெக அரசு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்வி

அதிமுகவில் அடுத்து என்ன? இபிஎஸ் தலைமையில் நாளை மாவட்டச் செயலர்கள் கூட்டம்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




