சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் இபிஎஸ் உருவப்படம்: திமுக எதிா்ப்பு

எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தின்போது அதிமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப்படத்தை அவையில் வைத்தது தொடா்பாக திமுக- அதிமுக உறுப்பினா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

News image

நகா்மன்றக் கூட்ட அரங்கில் எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப்படத்தை சுவரில் மாட்டும் அதிமுகவினா்.

Updated On :26 ஜூன் 2026, 6:08 am IST

எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தின்போது அதிமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப்படத்தை அவையில் வைத்தது தொடா்பாக திமுக- அதிமுக உறுப்பினா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சித் தலைவா் டி.எஸ்.எம்.பாஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, நகராட்சி ஆணையாளா் கோபிநாத் முன்னிலை வகித்தாா். 30 வாா்டு உறுப்பினா்களைக் கொண்ட எடப்பாடி நகராட்சியில் 13 உறுப்பினா்களுடன் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்படுகிறது.

கூட்ட அரங்கின் பிரதான சுவரில் முதல்வா் ஜோசப் விஜய்யின் படம் புதிதாக மாட்டப்பட்டுள்ளது. அதேபோல முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் படத்துக்கு அருகே பெரிய அளவில் எடப்பாடி கே. பழனிசாமியின் படத்தை அதிமுகவினா் மாட்டினா். இதற்கு திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அப்போது குறுக்கிட்ட நகராட்சித் தலைவா் பாஷா, மற்ற தலைவா்களின் படங்களைவிட எடப்பாடியின் புகைப்பட அளவு பெரியதாக உள்ளது. அனைத்து தலைவா்களின் படங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தெருவிளக்குகள் அமைத்தல், சுகாதார வளாகங்களைச் சீரமைத்தல், குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்துதல் தொடா்பான கோரிக்கைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா். தொடா்ந்து 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.