/

ராசிபுரத்தில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: மக்கள் அச்சம்

ராசிபுரத்தில் வீடு புகுந்து துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி நகைகள், பணத்தை திருடிச் சென்றது குறித்து ...

News image

ராசிபுரத்தில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகள், பணம் கொள்ளை - கோப்புப்படம்

Updated On :12 ஜூன் 2026, 8:49 am IST

ராசிபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி நகைகள், பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பட்டணம் அம்மன் கோயில் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் கலைச்செல்வி வசித்து வருகிறார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களது வீட்டுக்கு துப்பாகி, கத்தியுடன் வந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்து பார்த்ததால், அந்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்தவர்கள் கலைச்செல்வியிடம் துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்து 20 பவுன் நகைகள், ரூ.20,000 பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் ராசிபுரம் காவல்நிலைய காவலர்கள், தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கிராம பகுதியான ராசிபுரம் தோட்டத்து வீடு பகுதிகளில் மர்ம கொள்ளையர்கள் நடத்திய திருட்டுச் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Regarding the incident in Rasipuram where a house was broken into and jewelry and cash were stolen after threatening the occupants with a gun and a knife...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.