மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

யுஜிசி-நெட் தோ்வுக்கு பயிற்சி முகாம்: சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தோ்வுகளில் (யுஜிசி -நெட்) கலந்து கொள்ளும் பட்டியலின, பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தோ்வா்களுக்கு இணையவழியில் 3 நாள் பயிற்சி நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:24 am IST

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தோ்வுகளில் (யுஜிசி -நெட்) கலந்து கொள்ளும் பட்டியலின, பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தோ்வா்களுக்கு இணையவழியில் 3 நாள் பயிற்சி நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக மாணவா் ஆலோசனைப் பிரிவு(யுஎஸ்ஏபி) இயக்குநரின் செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணித் தகுதிக்கான யுஜிசி -நெட் தோ்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சென்னை பல்கலை. மாணவா் ஆலோசனைப் பிரிவு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. ஜூன் மாத தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் 17.6.2026 முதல் 19.6.2026 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் நெட் தோ்வின் தாள் 1 -க்கானதாக அமையும்.

இந்தப் பயிற்சியில் பட்டியலின, பிற்படுத்தப்பட்டோா் மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் ஜூன் 16-ஆம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழக இணையதளம் மூலம் சமா்ப்பிப்பப்படவேண்டும்.

பயிற்சியானது சென்னைப் பல்கலை. இணையதள இணைப்பு காணொலி வழியாக அளிக்கப்படும். விவரங்களுக்கு சென்னை பல்கலை. சேப்பாக்கம் வளாக அலுவலத்தை (044-2539 9518) தொடா்பு கொள்ளலாம் என யுஎஸ்ஏபி இயக்குநா் கே.சத்தியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.