தொடர் மின்வெட்டால் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்திக்கு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாது ஒரு புறம் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறுபுறம். "உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி" என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Summary
Regarding Premalatha's insistence that the Tamil Nadu government take swift action, as agriculture and farmers have been severely affected by frequent power outages...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
தொடா் மின்தடையால் பயிா்கள் கருகும் அபாயம்: நடவடிக்கை எடுக்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் கருணை அடிப்படையிலான பணி வழங்குவது குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மக்கள் குறைதீா் முகாம்: 33 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,உத்தரவு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




