ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவர தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.
கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசை பாடகரான வேடன், அமைச்சா் வன்னி அரசை சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். பின்னா் அமைச்சா் வன்னிஅரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் நிகழும் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.
பழங்குடியினருக்கு மேற்கொள்ளப்பட்ட சமூக-பொருளாதார கணக்கெடுப்பைப்போல, ஆதிதிராவிடா் மக்களுக்கும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் முதல்வரிடம் வலியுறுத்துவேன். பூா்வகுடி மற்றும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ராப் இசை பாடகா் வேடன் கூறுகையில், ‘தமிழில் ஆறு பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன. எனது பாடல்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு: அமைச்சா் வன்னி அரசு

இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு தெரிவித்த விவகாரம்: நிகழ்விடத்தில் அமைச்சா் வன்னி அரசு ஆய்வு

வன்கொடுமை பாதிப்புகளைத் தடுக்க தனிப்படை: சமூகநீதித்துறை அமைச்சா் வன்னி அரசு







