மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தி, முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான குரலாக ஒலிப்பேன் என அவர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பிரவீண் சக்ரவர்த்தியின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூ.) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சி.வி. சண்முகம், தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை தவெக அரசு ஒதுக்கியதால், வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Summary
Praveen Chakravarty, who has been announced as the Congress candidate for the Rajya Sabha election, thanks CM Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








