திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதிய கட்சி? நாளை 12 மணிக்கு மனம் திறக்கிறேன் - அண்ணாமலை

கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என அண்ணாமலை பதிவு

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 7:15 pm IST

தில்லி பயணத்தைத் தொடர்ந்து, நாளை (ஜூன் 5) நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அண்ணாமலை உரையாடவுள்ளார். இதில் புதிய கட்சி அறிவிப்பு குறித்த தகவல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

''நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

தில்லியில், அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அண்ணாமலை, நாளை சமூகவலைதள உரையாடலில் தனது முடிவை அறிவிக்கவுள்ளார்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு தில்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவா் நிதின் நவின், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக பொதுச் செயலா் பி.எல். சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்து தனது முடிவை தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவா்களை தில்லிக்கு பாஜக தலைமை அவசரமாக வரவழைத்து அண்ணாமலையுடன் சமரச பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

அண்ணாமலையின் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) தனது முடிவை அண்ணாமலை வெளியிடக்கூடும் என்ற தகவல் வெளியான நிலையில், நாளை தனது முடிவை அறிவிக்கவுள்ளார்.

Summary

Annamalai social media meet A New Party I Will Open Up Tomorrow at 12 PM Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.