திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! முதல்வர் விஜய் வாழ்த்து!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் வாழ்த்து...

News image

முதல்வர் விஜய் - படம்: எக்ஸ்

Updated On :1 ஜூன் 2026, 1:19 pm IST

உச்ச நீதிமன்ற நீதிபதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த
மூத்த வழக்குரைஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகத்  தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச்  சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம்  செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும். 

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவருக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்துக்கு வெங்கிட சுப்பிரமணி மோகனா உள்பட 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister C. Joseph Vijay has extended his congratulations to Senior Advocate Venkida Subramani Mohana, hailing from Tamil Nadu, on her appointment as a Judge of the Supreme Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.