ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? கனிமொழி எம்.பி. கேள்வி

காவிரி விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்திருப்பது பற்றி....

Kanimozhi MP

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :31 ஜூலை 2026, 8:31 pm IST

விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்னையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.

மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?

டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்னை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்னையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்காக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூருவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் கர்நாடகத்துக்கு முதல்வர் விஜய் வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

DMK MP Kanimozhi Questions TVK Govt: 'Does It Think It Can Keep Tamil Nadu Swayed by Publicity?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.