ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழி

மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்காமல் அவர்களின் எதிர்காலத்தை தவெக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளது பற்றி...

Vijay | Kanimozhi

முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - (கோப்புப் படம்)

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:02 pm IST

மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்காமல் அவர்களின் எதிர்காலத்தை தவெக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது என திமுக எம்பி கனிமொழி செவ்வாய்க்கிழமை (ஆக. 18) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல், அவர்களின் எதிர்காலத்தை தவெக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, இதையும் திட்டமிட்டு மறைமுகமாக செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா?

உடனடியாக நிலுவையிலுள்ள உதவித்தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியைத் தடையின்றி தொடரச் செய்ய வேண்டும் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK MP Kanimozhi stated on Tuesday (Aug. 18) that the TVK government has jeopardized the students' future by failing to provide them with scholarships.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.