ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி கைது; தவெக அரசின் கோழைத்தனம்: கனிமொழி கண்டனம்

உதயநிதி கைது செய்யப்பட்டது தவெக அரசின் கோழைத்தனம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi | Udhayanidhi Stalin

கனிமொழி | உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:56 pm IST

உதயநிதி கைது செய்யப்பட்டது தவெக அரசின் கோழைத்தனம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசிய போது, முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை வந்த காவல்துறையினர், வழக்குகள் குறித்து விளக்கம் கொடுத்து விசாரணைக்காக அவரைக் கைது செய்து தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் உதயநிது கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை எம்பியும்மான கனிமொழி தனது சமூக ஊடகப் பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.

ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” என விமர்சித்துள்ளார்.

Summary

Udhayanidhi arrested; TVK government's cowardice: Kanimozhi condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.