ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்

தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது பற்றி...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - X | Udhay

Published On :27 ஜூலை 2026, 4:51 pm IST

மற்ற கட்சிகளின் உறுப்பினர்களை சோஃபா கொடுத்து வாங்குவதுதான் தவெக அரசின் ஒரே வேலை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

”அரசை தவறாக பேசியதாக வழக்கு போட்டு மிரட்டும் வகையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்துள்ளனர். அவர் சிறையில் மிகவும் தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.

திமுகவை பழிவாங்குவதுதான் இந்த அரசின் ஒரே பணியாக இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் தவெக கட்சியினரே பல்வேறு புகார்களை தெரிவிக்கிறார்கள். அந்த புகாரின் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

திமுக, அதிமுக உறுப்பினர்களை சோஃபா கொடுத்து வாங்கும் பணிகளைதான் 24 மணிநேரமும் செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Summary

This is the TVK government's only job - Udhayanidhi's criticism.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.