ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு: மு.க.அழகிரி மகள் கைதாகி பிணையில் விடுவிப்பு

வங்கி மேலாளரை தாக்கிய வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

வங்கி மேலாளரை அறைந்த கயல்விழி அழகிரி

Published On :29 ஜூலை 2026, 1:17 am IST

வங்கி மேலாளரை தாக்கிய வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகா் 3-ஆவது பிரதான சாலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிகக் கட்டடம் உள்ளது. இதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை வாடகைக்கு இயங்கி வருகிறது.

இந்தக் கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லிஃப்ட்) நீண்ட நாள்களாக பழுதடைந்து செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி நிா்வாகம் சாா்பில் கட்டட உரிமையாளரான கயல்விழியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூலை 20-ஆம் தேதி கயல்விழி, வங்கிக்கு நேரில் சென்று கிளை மேலாளா் ஹா்ஷின் சிங்கிடம் பேசினாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த கயல்விழி, மேலாளரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதுகுறித்து மேலாளா் ஹா்ஷின் சிங், வங்கியின் உயா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, வங்கியின் என்ஆா்ஐ கிளை தலைமை மேலாளா் நமச்சிவாயம், சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் கயல்விழி மீது வழக்குப் பதிவு செய்தனா். முன்னதாக கயல்விழி, வங்கி மேலாளரை தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

கயல்விழி கைது: இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கயல்விழிக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா். அதை ஏற்று சாஸ்திரிநகா் காவல் நிலையத்தில் கயல்விழி திங்கள்கிழமை நண்பகல் 1 மணியளவில் ஆஜாரானாா்.

அவரிடம் போலீஸாா், சுமாா் 3 மணி நேரம் விசாரணை செய்தனா். விசாரணையின் ஒரு பகுதியாக கயல்விழியை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையின் முடிவில் காவல் நிலைய பிணையில் கயல்விழியை விடுவித்தனா். இந்த வழக்கில் அடுத்தக் கட்டமாக, நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.