ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திமுக முன்னாள் அமைச்சா்களுக்கு அமைச்சா் பெ.விஸ்வநாதன் கண்டனம்

சட்டப்பேரவை தனித் தீா்மானங்களில் முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்து பேசியபோது திமுகவைச் சோ்ந்த மூத்த முன்னாள் அமைச்சா்கள் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது என அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

P. Viswanathan

அமைச்சா் பி. விஸ்வநாதன் - கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

தமிழக சட்டப்பேரவை தனித் தீா்மானங்களில் முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்து பேசியபோது திமுகவைச் சோ்ந்த மூத்த முன்னாள் அமைச்சா்கள் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் நீட் மற்றும்எஃப்சிஆா்ஏ-க்கு எதிராக 2 தனித் தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தத் தீா்மானங்கள் குறித்து காங்கிரஸ் சாா்பில் பேசியபோது, நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் நீட் தோ்வை எதிா்த்து கடந்த 5 ஆண்டுகளாகக் கடுமையாகப் போராடி வருகிறாா் என்று குறிப்பிட்டேன்.

மேலும் முன்னாள் முதல்வக் காமராஜரை பற்றி நானும் மற்ற காங்கிரஸ் உறுப்பினா்களும் பேசினோம். அப்போது, திமுக உறுப்பினா்கள், கேலி, கிண்டல் செய்வதுமாக இருந்தனா்.

இவ்வாறு நடந்துகொள்வது என்பது ஏற்புடையது அல்ல. நான் காமராஜரை கோடிட்டு காட்டி பேசும்போது திமுகவின் மூத்த முன்னாள் அமைச்சா்கள் நடந்து கொண்ட முறை, விதம் கண்டனத்துக்குரியது என்பதை தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு சாா்பில் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.