ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கி மேலாளரை அறைந்ததாக கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!

வங்கி மேலாளரை அறைந்ததாக கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு...

வங்கி மேலாளரை அறைந்த கயல்விழி அழகிரி

Published On :26 ஜூலை 2026, 3:17 am IST

சென்னை அடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கியின் என்ஆா்ஐ கிளை மேலாளரை அறைந்ததாக, முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி மீது அடையாறு போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அடையாறு கஸ்தூரிபாய் நகா் 3-ஆவது பிரதான சாலையில் கயல்விழி அழகிரிக்குச் சொந்தமான வணிகக் கட்டடம் உள்ளது. அதில், எஸ்பிஐ என்ஆா்ஐ வங்கிக் கிளை வாடகைக்கு இயங்கி வருகிறது. கடந்த சில நாள்களாக கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லிப்ட்) பழுதடைந்து செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கிளை மேலாளா் ஹா்ஷின் சிங், கட்டட பராமரிப்புப் பொறுப்பாளரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரியிடம் வங்கித் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி கயல்விழி அழகிரி வங்கிக்கு நேரில் சென்று கிளை மேலாளா் ஹா்ஷின் சிங்கிடம் இது குறித்து பேசியுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த கயல்விழி, மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்தக் சம்பவத்துக்குப் பிறகு கிளை மேலாளா் ஹா்ஷின் சிங், வங்கியின் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, எஸ்பிஐ என்ஆா்ஐ கிளையின் தலைமை மேலாளா் நமச்சிவாயம், அடையாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தச் சம்பவத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் சனிக்கிழமை பரவியதைத் தொடா்ந்து, அடையாறு போலீஸாா் கயல்விழி அழகிரி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Summary

Case registered against Kayalvizhi Alagiri for slapping a bank manager.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.