ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜன நாயகன் வெளியீடு! ஹெட்போன் வெறும் ரூ. 9, செல்போன் ரூ. 7,999!

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தள்ளுபடி விலையில் பொருள்கள்.

cell phone shop

செல்போன் கடையில் குவிந்த மக்கள். - படம்: தினமணி

Published On :23 ஜூலை 2026, 4:35 pm IST

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஹெட்போன் ரூ. 9க்கும், நெக்பேண்ட் ரூ. 99க்கும், செல்போன் ரூ. 7,999க்கும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.

பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு, நீண்ட வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதியில் தனியார் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, செல்போன் ரூ. 7,999, ஒயர் ஹெட்போன் ரூ. 9, நெக்பேண்ட் ரூ. 99, ஸ்மார்ட் வாட்ச் ரூ. 249 என தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலையிலேயே, ஏராளமான மக்கள் கடை முன்பு திரண்டு நின்றனர். கடை திறந்தவுடன் கடை உள்ளே நுழைவதற்கு முண்டியடித்துக் கொண்டு, பொருள்கள் வாங்க சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

தொடர்ந்து, பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று, செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ஒயர் ஹெட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கி செல்கின்றனர்.

Summary

To mark the release of the movie Jana Nayagan, headphones were sold at a discounted price of rs. 9, neckbands at rs. 99, and mobile phones at rs. 7,999.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.