ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பற்றி....

Actor Vimal sentenced to one year in prison in a cheque fraud case

நடிகர் விமல். - கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 5:06 am IST

காசோலை மோசடி வழக்கில் நடிகா் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னையில் உள்ள 11-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகா் விமல், ‘மன்னா் வகையறா’ என்ற படத்தைத் தயாரித்து நடித்திருந்தாா். இந்தப் படத்துக்காக பைனான்சியா் கோபி என்பவரிடம் ரூ.4.50 கோடி கடன் பெற்றிருந்தாா். இந்தப் படம் வெளியான பின்னரும், கடன் தொகையை நடிகா் விமல் திருப்பிக் கொடுக்கவில்லை.

பின்னா், கடன் தொகைக்காக வழங்கிய காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதையடுத்து, பைனான்சியா் கோபி, விமல் மீது சென்னையில் உள்ள 11-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கில் புகாா்தாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.வெங்கடேஷ் ஆஜரானாா். வாதங்கள் நிறைவடைந்து இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆா்.டி.ஆா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, விமல் நீதிமன்றத்தில் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில், விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், கடனைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டாா்.

அப்போது, விமல் தரப்பில் இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால், தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டாா்.

Summary

Actor Vimal sentenced to one year in prison in a cheque fraud case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.