ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காசோலை மோசடி வழக்கில் 3 மாதம் சிறை: வாணியம்பாடி நீதிமன்றம் தீா்ப்பு

வாணியம்பாடி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற காசோலை மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :10 ஜூலை 2026, 1:05 am IST

வாணியம்பாடி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற காசோலை மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் விவரம் வருமாறு: கடந்த 2018-ஆம் ஆண்டு, வேலூா் மாவட்டம், சத்துவாச்சாரி, 37-ஆவது தெருவைச் சோ்ந்த ரங்கன் என்பவரின் மகன் ஆா்.யூகா (45) என்பவா் மீது, வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சோ்ந்த எம்.முருகன் என்பவருக்கு ரூ. 10 லட்சத்துக்கு வழங்கிய காசோலை மோசடி குறித்து வாணியம்பாடி நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இது தொடா்பாக மாற்றுமுறை ஆவணச் சட்டப்பிரிவு 138-இன் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நடுவா் நீதிமன்ற நீதிபதி கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஆா்.யூகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மூன்று மாத காலம் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், காசோலை தொகை ரூ. 10,00,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 10,10,000-த்தை ஒரு மாத காலத்துக்குள் புகாா்தாரரான முருகனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்தத் தொகையை வழங்கத் தவறினால், கூடுதலாக இரண்டு மாதங்கள் மெய்க்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.