ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாரச் சந்தையில் காய்கறி விற்கிறாரா பிரபல நடிகர்? வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி

நடிகர் விமல் வாரச் சந்தையில் காய்கறி விற்பது போன்று வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:50 pm IST

கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விமல். ஆனால், இவர் திருச்சி வாரச் சந்தையில் காய்கறி விற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது ஏஐ புகைப்படமா இருக்குமோ என்று கூறப்பட்டாலும், உண்மையான புகைப்படங்கள் என்று தெரிய வந்தது. மேலும், காய்கறிகளை அவர் விலைச் சொல்லி விற்கும் விடியோக்களும் வெளியாகியிருந்தன. அது உண்மையான புகைப்படங்கள் என்று தெரிய வந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வாரச் சந்தையில்தான், நடிகர் விமல் காய்கறி விற்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

அண்மைக் காலமாக விமல் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததும், அவர் கொடுத்த காசோலை திரும்பி வந்ததால் சிறைத் தண்டைன விதிக்கப்பட்டதும் அவரது ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தன. அதனால் அவர் காய்கறி விற்கச் சென்றுவிட்டாரோ என்றெல்லாம் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால், உண்மை அப்படியில்லையாம். அவரது சொந்த ஊரே பண்ணாங்கொம்பு. அங்கு புதிதாக வாரச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, புதிய காய்கறி சந்தையைப் பார்த்ததும், அங்கிருந்த வியாபாரிகளுடன் அமர்ந்து கொண்டு ஆசையாக காய்கறி விற்பனை செய்திருக்கிறார்.

தலையில் தொப்பியுடன் தக்காளி, கத்திரிக்காய் என்று கூவி கூவி விற்றிருக்கிறார். பிறகுதான் அவரை அங்கிருந்தவர்கள் கண்டு கொண்டுள்ளனர். அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார். இநத் புகைப்படங்கள்தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி, இந்த நடிகருக்கு இந்த நிலையா? என்றெல்லாம் பேச வைத்துவிட்டது.

Summary

is actor selling vegetables at the weekly market Photos spark

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.