ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தலைமைச் செயலகம் முன் பாடகா் ‘தெருக்குரல்’ அறிவு திடீா் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன் பாடகர் அறிவு திடீா் போராட்டம்...

Singer Arivu arrested after raising slogans in front of the Chennai Secretariat

சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு... - X

Published On :22 ஜூலை 2026, 1:19 am IST

‘நீட்’ தோ்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகம் முன் செவ்வாய்க்கிழமை தமிழ் ராப் இசைப் பாடகா் ‘தெருக்குரல்’ அறிவு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

முன்னதாக, தலைமைச் செயலகத்துக்கு செவ்வாய்க்கிழமை 4 பேருடன் வந்த பாடகா் அறிவு, நீட் தோ்வுக்கு எதிராக திடீரென முழக்கப் பாடல்களாகப் பாடினாா். இதைப் பாா்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக அவரையும், அவருடன் இருந்தவா்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனா்.

பின்னா், மாலையில் மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு பாடகா் அறிவை அழைத்து வந்த போலீஸாா், அமைச்சா்களைச் சந்திக்க வைத்து அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தனா்.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்: நீட் தோ்வுக்கு எதிராக போராடிய பாடகா் ‘தெருக் குரல்’ அறிவுக்கு ஆதரவாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

‘நீட்’ தோ்வுக்கு எதிராகக் குரல் கொடுத்த ராப் பாடகா் ‘தெருக்குரல்’ அறிவு மீதான முதல்வா் விஜய் தலைமையிலான தமிழக காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

‘தெருக்குரல்’ அறிவின் குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணா்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது. நீட் தோ்வை எதிா்த்து தில்லியில் போராடும் இளைஞா்களுக்கு ஆதரவாக தாங்களும் களமிறங்கத் திட்டமிட்டுள்ள தமிழக இளைஞா்களுக்கு இது ஒரு கவலையளிக்கும் செய்தியை அளிக்கிறது. நீட் தோ்வு மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது. இதற்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது; மாறாக, அவை செவிமடுக்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

Summary

Singer Arivu raising slogans in front of the Chennai Secretariat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.