ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் இடம் மாறுகிறதா?

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் இட மாற்றம் குறித்து...

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 11:07 am IST

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம், தற்போது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முதல் கோட்டை இதுதான், 1644-ல் கட்டப்பட்ட இந்தக் கோட்டையானது, இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராணுவத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதாகக் கூறி, தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய தவெக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலக அறை, அதிகாரிகளின் அலுவலகங்கள், எம்எல்ஏ-க்கள் வந்து செல்லும்போது காத்திருப்பதற்கான அறைகள் என தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவோர் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்துவதால், தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள வாகன நிறுத்துமிடம் எப்போதும் நெருக்கடி நிறைந்ததாகவே உள்ளது.

இதன் காரணமாக, தலைமைச் செயலகத்தை இட மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கான இடத்தைத் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தகவல்களின்படி, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்ததாகவும், ஆனால் ஏற்கெனவே அந்தப் பகுதி நெரிசலான பகுதி என்பதால், அம்முடிவு குறித்து மேலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தலைமைச் செயலகத்துக்காக கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆய்வு நிலைய வளாகமும் பரிசீலிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

முன்னதாக, 2003-ல் தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முயற்சித்த நிலையில், கல்லூரி மாணவிகளின் எதிர்ப்பால் தலைமைச் செயலக இட மாற்றம் கைவிடப்பட்டது.

2010-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் (திமுக) ஆட்சியில் ஓமந்தூரார் வளாகத்தில் தலைமைச் செயலகம் திறக்கப்பட்டு, சட்டப்பேரவைத் தொடரும் நடந்தது.

ஆனால், 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஆட்சியிலும் தலைமைச் செயலகத்தை இட மாற்றம் செய்ய கிண்டி குதிரைப் பந்தய திடலைப் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் விமானப் போக்குவரத்து இருப்பதால், உயர்ந்த கட்டடங்களை கட்ட முடியாத சூழல் காரணமாக முடிவு கைவிடப்பட்டது.

தலைமைச் செயலகம் இட மாற்றம் முயற்சிகளின் தொடர்ச்சியாக, தற்போது தவெக அரசும் முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.

Summary

Is the Tamil Nadu Government Secretariat being relocated?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.