ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் சிஜேபிக்கு ஆதரவாகப் போராடியவர்கள் கைது!

சென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக இடதுசாரி இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

 Cockroach Janata Party members protest in Chennai

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் காவல் துறை - எக்ஸ்

Published On :21 ஜூலை 2026, 9:30 pm IST

சென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக இடதுசாரி இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

நீட் தேர்வை எதிர்த்து தில்லியில் போராடி வரும் மாணவர் - இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராடியவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று (ஜூலை 20) பேரணி சென்றனர்.

நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமைதியாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் சென்னையில் இடதுசாரி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை புதுப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டி.ஒய்.எஃப்.ஐ.) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவியது.

Summary

Cockroach Janata Party members protest in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.