ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உரிமைகளுக்காக குரல் கொடுப்பது குற்றமல்ல: கென் கருணாஸ்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு நடிகர் கென் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து...

Ken karunas supports Cockroach janata party protest

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் / உள்படம்: கென் கருணாஸ் - எக்ஸ்

Published On :22 ஜூலை 2026, 10:14 pm IST

உரிமைகளுக்காக குரல் கொடுப்பது குற்றமல்ல என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு நடிகரும் இயக்குநருமான கென் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

ஜனநாயகம் மக்களுக்கானது. அதில் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது குற்றம் அல்ல; அது எங்கள் கடமை. எங்கள் குரல் அதிகாரத்தில் இருப்பவர்களை நடுங்கச் செய்தால், இளைஞர்களின் வலிமையை நினைத்துப் பாருங்கள். இந்திய இளைஞர்களின் சக்தியை ஒருபோதும் தரக்குறைவாக மதிப்பிட வேண்டாம். எதிர்வரும் நாள்கள் அவர்களுக்காக பேசும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் போராட்டம்

நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 20ஆம் நாளில் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஜூலை 22) 25 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடுத்தனர். பெண்கள் உள்பட சிறுமிகளின் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

எனினும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், நடிகை அபிராமி ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் கென் கருணாஸும் இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Summary

Ken karunas supports Cockroach janata party protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.