ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தடியடி... விரட்டியடிப்பு... ஜந்தர் மந்தரில் தொடரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்!

தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறித்து...

cockroach janata party

போராட்டக் களத்தில்... - பிடிஐ

Published On :20 ஜூலை 2026, 10:29 pm IST

தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றம் நோக்கின் இன்று பேரணியாகச் சென்றவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்த நிலையில், போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

காவல் துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் தனது உண்ணாவிரத போரட்டத்தைத் தொடர்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

23 நாள்களைத் தாண்டிய நிலையில், மேலும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாகவும், அமைதி வழியில் போராடிவந்த இளைஞர்கள் மீது நடத்திய தாக்குதல்களைக் கண்டதால், இளைஞர்களின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் வரையில் அல்லது அவர்களை மருத்துவமனையில் நான் சந்திக்க அனுமதி அளிக்கும் வரையில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் தங்கள் குறைகளை இன்றோ அல்லது நாளையோ நாடாளுமன்றத்தில் முன்வைக்க அனுமதிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருமாறு காவல்துறையினருக்கும் அரசாங்கத்துக்கும் கோரிக்கை வைப்பதாகவும் கடிதத்தில் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து அமைதியான முறையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி சென்றனர்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்ற நிலையில், பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் அரசு இவர்களைத் தடுத்து நிறுத்தியது.

பொதுப் பாதுகாப்பு கருதி தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். பேரணியாக வருவோரைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது.

உரிமைகளுக்காக போராடும் இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Summary

cockroach janata party protest continues their sit-in protest at Jantar Mantar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.