ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு

தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து...

CJP Protest

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் - கோப்புப்படம்

Published On :30 ஜூலை 2026, 6:04 pm IST

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து என 3 கோரிக்கைகள் மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வைத்தனர்.

போராட்டம் தொடங்கி 36 நாள்களுக்குப் பிறகு, ஜூலை 25 ஆம் தேதியில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட 13 வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாகவும், போராட்டத்தின்போது தடுத்து வைக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Summary

Jantar Mantar protest: No police action against protesters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.