
ஜன நாயகன் பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடுங்கள்! அமைச்சர் ஆனந்த்
ஜன நாயகன் பட வெளியீடு குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தியதாகத் தகவல்...
முதல்வர் விஜய், என். ஆனந்த் - கோப்புப் படம்
ஜன நாயகன் பட வெளியீட்டை, திருவிழா போல கொண்டாட வேண்டும் என அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தியாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய், முதல்வராவதற்கு முன்பு நடித்த அவரது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையொட்டி தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
அமைச்சர் என். ஆனந்தின் பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்து பலரும் இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அப்போது முதல்வர் விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பட வெளியீட்டை திருவிழாவைப் போல் கொண்டாட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தவெகவினருக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் வழிகாட்டுதல்படி திரையரங்குகளை சிறப்பாக அலங்கரிக்குமாறும் ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தை காண ஏதுவாக பிரமாண்டமான வரவேற்பை அளிக்குமாறும் அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
Summary
Celebrate the release of the movie Jananayagan like a festival: Minister Anand
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





