ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கண்ணீர் சிந்தியபடி பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது தொடர்பாக..

CM Vijay

முதல்வர் விஜய் - file photo

Published On :10 ஜூலை 2026, 4:48 pm IST

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் கண்ணீர் சிந்தியபடி அரசுப்பணி நியமன ஆணைகளை வழங்கியதாக, பணி ஆணையை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

அதன்பிறகு, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசுப் பணியாணையை முதல்வர் விஜய் வழங்கினார். அப்போது, கண்ணீர் மல்க பணி நியமன ஆணைகளை வழங்கியதாக, பணி ஆணையை பெற்றுக்கொண்டவர்கள் வெளியில் வந்து தெரிவித்தனர்.

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 பேருக்குத்தான் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

அதில், சாந்தி என்ற பயனாளிக்கு, பணியாற்ற முடியாத சூழல் இருப்பதால், அரசுப் பணி வழங்கப்படாமல், அதற்கு பதிலாக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது.

மற்ற 31 பேரின் விவரங்களும், அவர்களுக்கு வழங்கப்படும் பணிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இதில் 17 பெண்களுக்கும் 14 ஆண்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Recipients of the appointment orders stated that Chief Minister Joseph Vijay handed over government job appointment orders to the families of those who lost their lives in the Karur crowd crush, while shedding tears.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.