ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்! கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு அரசுப் பணி?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு அரசுப் பணி வழங்கப்படுவது குறித்து...

Karur stampede: Chief Minister Vijay to meet the affected

கரூர் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :3 ஜூலை 2026, 7:33 am IST

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் ச. ஜோசப் விஜய் வழங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் மற்றும் செந்தில்பாலாஜியும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இருப்பினும், பாதுகாப்புகள் காரணமாக விஜய் நேரில் செல்லாமல், காணொலி வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும் மன்னிப்பும் கோரினார். தொடர்ந்து, நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரினார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை வருகிற ஜூலை 10 ஆம் தேதியில் முதல்வர் விஜய் நேரில் சந்திக்கவிருப்பதாக அமைச்சர் என். ஆனந்த் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான நியமன ஆணையையும் முதல்வர் விஜய் வழங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

CM Vijay is set to provide government jobs to the families of those who lost their lives in the Karur stampede

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.