ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பணமா ஜனமா.. என்றால் எனக்கு ஜனம்தான் முக்கியம்: முதல்வர் விஜய்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியது பற்றி...

cm vijay

முதல்வர் விஜய் - video crop

Published On :10 ஜூலை 2026, 1:26 pm IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பணமா ஜனமா என்றால் எனக்கு ஜனம்தான் முக்கியம் என முதல்வர் விஜய் பேசினார்.

கரூர் சம்பவம் நிகழ்ந்த அன்றைக்கு காவல்துறையினர் ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை, ஆனால் பழியை மட்டும் தவெக மேல் போட்டு அதிலும் ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பழியைத் தூக்கி தவெக மேல் போட்டு அங்கேயும் அரசியல் செய்கிறார். நமக்காக வந்திருக்கும் மக்களைக் காக்கவைத்து அதில் ஆதாயம் தேடும் அரசியல்வாதி நானல்ல..

மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். எனக்காக எல்லவற்றையும் கொடுத்த இந்த மக்களுக்கு அனைத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.

வலி, காயங்களைக் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி மக்கள் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அதுமட்டும் போதாது.. காலாக்காலத்துக்கும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் செய்தால் மக்களை விட்டு ஓடிவிடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால், யார் எது செய்தாலும் நான் மக்களை விட்டுச் செல்லமாட்டேன். அன்றைக்கும் சொன்னேன், இன்றைக்கும் சொல்கிறேன், நாளைக்கும் சொல்வேன், திடமாக சொல்கிறேன்.. பணமா ஜனமா என்று கேட்டால், எனக்கு என் ஜனம்தான் முக்கியம்..

மக்களை விட எனக்குக் காசு பணம் முக்கியமல்ல... இவ்வளவு குறைகள் சொல்பவர்கள் ஏன் வெளிப்படையாகப் பேச வரவில்லை. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.