அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் விஜய் பதிலளிக்க உத்தரவு...

News image

முதல்வர் விஜய் - CMO Tamil Nadu

Updated On :7 ஜூலை 2026, 11:09 am IST

பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய்யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விஜய்யின் வேட்புமனுவில் தவறான, முரணான தகவல்கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் முதல்வர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தபின் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதேபோல வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா வெற்றிக்கு எதிராகவும் திருவண்ணாமலையில் திமுகவின் எ.வ. வேலு வெற்றிக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கிலும் அவர்களிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் தொடர்பாக சுமார் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Election Case: Madras High Court issues notice to Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.