அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது! திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி

News image

அரசுப்பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு | திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 10:43 am IST

அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"அமைச்சர் கீர்த்தனா பள்ளியில் ஆய்வு செய்தது குறித்து அவரே பதில் சொன்னால்தான் நன்றாக இருக்கும். அமைச்சர்கள் மட்டுமின்றி அதிகாரிகள் அனைவருமே இப்போது எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவர்தான் அப்படி செயல்படுகிறார் என்று சொல்ல முடியாது. சமூக ஊடகங்களில் பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அது பொது ஒழுங்குக்கு கேடாக இருக்கும் என்றால் சுட்டிக் காட்டுவோம். அமைச்சர்கள் அதை உள்வாங்கிக் கொண்டு, அது தவறு என்றால் அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்ற பிறகு தான் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுகவில் சேர்த்தது அதிர்ச்சியாக இருக்கிறது.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப்பள்ளியில் சென்று ஆய்வு மேற்கொண்ட விடியோவுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

It has become a habit for ministers to post Reels: Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.