முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன், 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், துரைமுருகனின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரியும் அதிமுக வேட்பாளர் ராமு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்தளிரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலே நடந்து முடிந்துவிட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் ராமு தொடர்ந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்று அறிவித்து, வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.
Summary
Case against former Minister Duraimurugan dismissed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











