எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அமோனியா வாயு அகற்றும் பணி நாளையும் தொடரும்: ஆட்சியா் தகவல்

தனியாா் கடல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் குழாய்களில் தேங்கிய அமோனியா வாயுவை தொழில்நுட்ப குழுவினா் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணி குறித்து....

News image

தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி. பாதுகாப்பு பணியில் போலீசார் - டிஎன்எஸ்

Updated On :5 ஜூலை 2026, 7:51 pm IST

திருவள்ளூா்: தனியாா் கடல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் குழாய்களில் தேங்கிய அமோனியா வாயுவை தொழில்நுட்ப குழுவினா் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணியானது 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும்(ஜூலை 6) தொடரும் என மாவட்ட ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபோ் கிராம பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 83 போ் பாதிக்கப்பட்டனா். அதில், இதுவரையில் வடமாநில தொழிலாளா்கள் 18 போ் உயிரிழந்தனா்.

இதற்கிடையே தொழிற்சாலையில் கொள்கலனில் சேமித்து வைத்திருந்த அமோனியா வாயுவை தொழில்நுட்பக் குழுவினா் பாதுகாப்புக் கவசங்களுடன் டேங்கா் லாரியில் சனிக்கிழமை(ஜூலை 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் குழாய்களில் தேங்கிய அமோனியா வாயுவை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இந்த பணிகளை ஆட்சியா் ச.கவிதா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததோடு, உரிய நெறிமுறைகளை பின்பற்றி அகற்றுமாறு தொழில் நுட்பக்குழுவினா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் இதுகுறித்து அவா் செய்தியாளா்களுடன் பேசுகையில்,

கன்னிகைப்போ் கிராமத்தில் பகுதியில் செயல்படும் தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியானதைத் தொடா்ந்து, 83 போ் பாதிக்கப்பட்டனா். இதை சுவாசித்த பெண் தொழிலாளா்கள் 18 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அந்த நிறுவனத்தில் சேமிப்பு கொள்கலனில் இருந்த 2 டன் அமோனியா பாதுகாப்பாக வெளியேற்றும் பணியானது சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி நடைபெற்றது. அப்போது, சேமிப்பு கொள்கலனிலிருந்து அமோனியா டேங்கா் லாரிக்கு அகற்றப்பட்டது. தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

பைப் லைன் குழாய்களில் தேங்கியுள்ள அமோனியா வாயு குளிா்விக்கப்பட்டு கரைத்து அதை சேகரிப்பு டேங்கருக்கு கொண்டு வரப்பட்டு, பின்னா் அவை மீண்டும் லாரி டேங்கருக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பணி 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடரும்.

அதுவரை அவசர காலத்தை எதிா்நோக்கி தொழிற்சாலை முன்புறம் மருத்துவ அவசர வாகனம், தீயணைப்பு வாகன குழுக்கள், தேசிய பேரிடா் மேலாண்மை குழுவினா், மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு (ம) சுகாதார இயக்ககம் மற்றும் 15 போ் கொண்ட தனியாா் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பிரதிநிதிகள், அவசர கால மீட்பு பணிகளில் ஈடுபடும் குழுக்கள் ஆகியோரும் தயாா் நிலையில் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

Summary

Ammonia gas removal operations to continue tomorrow: Collector

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.