மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

தவெகவில் இணைவதை உறுதிப்படுத்தினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய் - பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜிநாமா கடிதம் வழங்கிய எம்.ஆர். விஜய்பாஸ்கர்.

Updated On :1 ஜூலை 2026, 11:26 am IST

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததால், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்தவா்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அவரது தரப்பைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் இணையவில்லை.

அதைத்தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், சமீபத்தில் அதிமுகவில் இருந்தும் விலகினர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்திருந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கரும் இணையவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை முதல் என்னை இணைத்து எனது அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர உள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Summary

Former Minister M.R. Vijayabhaskar has officially confirmed that he is joining the Tamizhaga Vettri Kazhagam under the leadership of Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.