/

தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

News image
தங்கம் விலை.
Updated On :26 ஜனவரி 2026, 4:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.375க்கு விற்பனையாகிறது. மேலும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி நாள்தோறும் மாறி, மாறி உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.