/

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image
- கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 4:17 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் வெள்ளி கிலோ இன்று(சனிக்கிழமை) ரூ. 10,000 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காலையில் ரூ. 3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ. 500 குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று(சனிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. 1,16,960 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 உயர்ந்து ரூ. 14,620-க்கு விற்பனையாகிறது. தங்கம் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தில் இருந்து வருகிறது.

அதேபோல வெள்ளி விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 355-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 உயர்ந்து ரூ. 3,55,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.