தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூா்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஷோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். இதில் பங்கேற்க 52 செயற்குழு உறுப்பினா்கள், 39 சிறப்பு அழைப்பாளா்கள் என 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 60 போ் மட்டுமே பங்கேற்றனா்.