டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யாருடன் கூட்டணி? தில்லியில் தமிழக காங். நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே ஆலோசனை!

தில்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை...

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தில்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சித் தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கட்சியை மீட்டெடுக்கவும் வலுப்படுத்தவும் காங்கிரஸ் தலைமை பல்வேறு மாநிலங்களில் புதிய தலைவர்களை, நிர்வாகிகளை நியமித்து வருகிறது.

தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று தில்லியில் கட்சித் தலைமை ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கட்சியை வலுப்படுத்துவது மட்டுமின்றி கூட்டணி தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய கூட்டத்திற்கு பிறகு தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி குறித்த முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.