இந்திய ராணுவ முன்னாள் தளபதி எம்.எம். நரவணே ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) சுயசரிதை நூல் விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மக்களவையில், நரவணேயின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரிகளை மேற்கோள்காட்டி, 2020 ஆம் ஆண்டு லடாக் எல்லை விவகாரத்தில் சீனா உடனான மோதலின்போது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக ராகுல் காந்தி விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வெளியாகாத நூலை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், இந்த நூல் இணையதளங்களில் விற்பனைக்குள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி நூலுக்கான உரிமத்தை வைத்துள்ள பென்குயின் ரேன்டம் ஹவுஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நரவணேவின் நூலை இன்னும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக வெளியாகாத முன்னாள் ராணுவத் தளபதி நரவணே நாலின் பிரதிகள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்த ராகுல் காந்தி தெரிவித்ததாவது:
“நரவணே வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனது நூலை வாங்குவதற்கு இந்த இணைப்பை பின்தொடரவும் என்று தெரிவித்துள்ளார். நரவணே பொய் சொல்கிறாரா? அல்லது பென்குயின் பொய் சொல்கிறதா? என்பதே எனது கேள்வி. முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நம்புகிறேன்.
புத்தகம் வெளியிடப்படவில்லை என்று பென்குயின் கூறுகிறார். ஆனால் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. பென்குயின் நிறுவனத்தைவிட நரவணேவை அதிகம் நம்புகிறேன். நீங்கள் நரவணேவைவிட பென்குயின் நிறுவனத்தை நம்புகிறீர்களா?
பிரதமருக்கும், இந்திய அரசுக்கும் இடையூறு கொடுக்கக் கூடிய தகவல்களை தனது நூலில் நரவணே வெளியிட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். பென்குயின் அல்லது ராணுவத் தளபதி, இவர்களில் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Summary
Won't you trust Naravane? Will he lie? Rahul asks!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல்
ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? ராகுல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



