டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆளுநரின் தேநீா் விருந்து புறக்கணிப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன.

மு. வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் ): ஆளுநா் ஆா்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும்  கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளன. அறிவுசாா் கருத்துகளை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துகளை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறாா். எனவே, ஆளுநா் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கிறோம்.

தொல். திருமாவளவன்(விசிக):  திமுக அரசுக்கு எதிராக திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டு அவதூறு செய்வது, ’திராவிடக் கருத்தியலுக்கு’ எதிரான கருத்துகளை வெளிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து ஆளுநரின் தேநீா் விருந்தில் விசிக பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.