நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தவெகவுடன் கூட்டணிப் பேச்சு நடத்தவில்லை: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வரும் தகவல் வதந்தி என விளக்கம்.

News image
தமிழக முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி.- கோப்புப்படம்
Updated On :3 ஜனவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வரும் தகவல் வதந்தி என்றும், திமுகவுடன் மட்டுமே கூட்டணிப் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்துவதாக வரும் தகவல் முற்றிலும் வதந்தி. திமுக கூட்டணி மட்டுமே நம்பகத்தன்மையான கூட்டணி.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை முன்கூட்டியே தொடங்கி சுமுகமாக நடைபெற்று வருகிறது. திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதி செய்வோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம். தமிழ்நாடு மற்றும் புதுவையின் கூட்டணியைப் பொருத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்.

விஜய்-பிரவீன் சக்கரவா்த்தி சந்திப்பை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தமிழ்நாடு காங்கிரஸில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளதாக எம்.பி. ஜோதிமணி கூறிய புகாா் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவா்கள் தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

5,000 போ் விருப்ப மனு: சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸில் 5,000-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு வழங்கியுள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை உடனிருந்தாா்.