காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக திமுக உறுதியளித்திருப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மாநில தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று வருகை தந்தனர்.
முதலாவதாக காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அதன்படி பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் ஆகியோர் செய்தியாளர்களுடன் பேசினர்.
செல்வப்பெருந்தகை பேசுகையில், "திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்களும் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்வரிடம் கலந்து ஆலோசிப்பதாக கூறியிருக்கிறார்கள்.
காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும் நம்பிக்கையோடும் சென்று கொண்டிருக்கிறது. எந்தவித பிரச்னையும் இல்லை.
இந்த கூட்டணி கொள்கை கூட்டணி, இயற்கையான கூட்டணி, நம்பிக்கையுள்ள உறுதியான கூட்டணி, தமிழ்நாட்டைக் காக்கும் கூட்டணி, மதவாதிகளை விரட்டும் கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
Summary
CM stalin confirms giving one Rajya Sabha seat to Congress: selvaperunthagai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்வப்பெருந்தகை மீதான சோதனை உள்நோக்கம் கொண்டது! காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


