பிரதமர் மோடி நாளை(மார்ச் 1) மதுரை வரவுள்ள நிலையில் அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நாளை மாலை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ள நிலையில் இரு கட்சிகளிடையே நாளை மாலை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி நாளை மதுரை திருப்பரங்குன்றம் சென்றுவந்த பிறகு பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்பின்னர் இரு கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மதுரை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு சென்னை வரும் பிரதமர் மோடி நாளை காலை புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். பின்னர் மாலை 3 மணியளவில் மதுரைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ. 4,400 கோடி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இதன்பின்னர் மதுரையில் நடைபெறும் என்டிஏ மாநாட்டில் பங்கேற்கிறார்.
Summary
Seat-sharing talks between AIADMK and BJP tomorrow?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

என்டிஏ தொகுதிப் பங்கீடு பேச்சு! பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை!

மார்ச் 23ல் பியூஷ் கோயல் சென்னை வருகை? அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையெழுத்து?
திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சு! இன்று கையெழுத்தாகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



