மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்!

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதிப் பங்கீடு பற்றி....

News image

ENS

Updated On :4 மார்ச் 2026, 11:19 am

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. தவெகவுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அதாவது காங்கிரஸ் தரப்பில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்துவதாகக் கூறப்பட்டது.

ஆனால், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவுடன்தான் கூட்டணி என்று கூறி வந்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று(மார்ச் 3) திடீரென சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் உடனிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, திமுகவுடன் கூட்டணி உறுதி, பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது, விரைவில் அறிவிப்போம் என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் சுமார் 40 வரை தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் திமுக 28 தொகுதிகள் தரத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

அதேபோல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்குவதாக திமுக கூறியிருப்பதாக செல்வப்பெருந்தகையே கூறியிருந்தார்.

இந்நிலையில் இறுதியாக தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(மார்ச் 4) மாலையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

Summary

Congress gets 28 seats and one Rajya Sabha seat in DMK alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.