

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக தானமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.
வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்தும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு நல்லகண்ணு காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
இதனிடையே, அவரின் விருப்பப்படி மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு அவரின் உடல் தானம் அளிக்கப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
summary
Communist Leader Nallakannu body donated to Madras Medical College!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!
நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!

நல்லகண்ணு கவலைக்கிடம்: முதல்வா் நலம் விசாரிப்பு
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

