இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழ சின்னத்தை தங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், அன்புமணி பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழ சின்னத்தை தங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், அன்புமணி பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில், அக்கட்சியின் பொதுச் செயலா் முரளி சங்கா் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமகவின் பெயா், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக ராமதாஸை அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தா்மபிரபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பாமக தலைவா் அன்புமணி மற்றும் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.