கோவையில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது.
கோவை விமான நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன், குணா தவசி ஆகிய மூவரும் இறுதி விசாரணைக்காக இன்று கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை நடத்தி வரும் 25 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில்,நவம்பர் 2 ஆம் தேதியில் இருவரும் காரில் வெளியே சென்றுள்ளனர். பின்னர், கோவை விமான நிலையத்தின் பின்புறம் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அன்றிரவு 11 மணியளவில் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது, அங்கு வந்த 3 பேர் காருக்குள் இருந்த இருவரையும் வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அந்தக் கும்பலின் நடவடிக்கையைக் கண்டு அச்சமடைந்த அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காரை தடுத்து நிறுத்தி, இளைஞரைத் தாக்கிவிட்டு, கத்தி முனையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில், மறுநாள் (நவ. 3) அதிகாலை 3 மணியளவில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த இளைஞர், தனது கைப்பேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணான 100-ஐ தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், இளைஞரையும், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் முள்புதர் பகுதியில் இருந்த மாணவியையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, மூவரும் தப்பியோட முயன்றதால், மூவரையும் போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
சுமார் 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, நேற்றுடன் (பிப். 23) சாட்சி பதிவுகள் முடிவடைந்தன.
இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பானது, இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Covai College Student gang rape case: The accused Satheesh, Kaleeswaran, Thavasi were brought to the District Mahila Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இறுதி வாதம் தொடங்கியது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


