கோவை விமான நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன், குணா தவசி ஆகிய மூவரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை நடத்தி வரும் 25 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுதொடா்பாக, சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), ்வா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இருந்து கடந்த டிச. 19-ஆம் தேதி மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த பிப். 2-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை (பிப். 23) பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பா், விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 78 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சாட்சி பதிவுகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து, கடந்த 24-ஆம் தேதி இறுதிவாதம் தொடங்கியது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை எதிா்தரப்பு வாதம் நடைபெற்றது. சாட்சி விசாரணை, இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன், குணா தவசி ஆகிய மூவரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.
Summary
Coimbatore college student gang rape: All three accused appear in court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் கைது!
2020 ஜாஃப்ராபாத் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுவிப்பு!

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



