கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சனிக்கிழமை (மாா்ச் 7) தீா்ப்பு அளிக்கப்பட்டது.
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே மொபட்டில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனா். இதுதொடா்பாக சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னா் அரசு தரப்பு விசாரணை நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தம் 112 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிப் பதிவுகள் முடிவடைந்துள்ளன. இந்த வழக்கில் 270 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 7) தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் குற்றவாளிகள் மூவருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பின் முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Summary
gang-raping a college student, aged 20, in a deserted area near Coimbatore International Airport on the intervening night of November 2 and 3, 2025 - Mahila Court sentences all three accused to life imprisonment
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்ச் 7-இல் தீா்ப்பு

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இறுதி வாதம் தொடங்கியது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



